தொடரும் 5 ஆம் நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டம் – பிரித்தானியாவில்

18.05.2019 தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத வாரலாற்று நாளினை உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழர்கள் ஒரே கொள்கையில் எமது தேசியக் கொடியின் கீழ்  ஒன்றாக அணிதிரண்டு எழுச்சி கொள்ளச் செய்வோம் என்ற செய்தியுடன் இன்றைய 5ம் நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டாம் ஆரம்பமாகியது.

முள்ளிவாய்க்காலிலே கொள்ளப்பட்ட எம் சொந்தங்களை நினைவுகூர்ந்தும், முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதி கோரியும் பிரித்தானியாவிலே தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றுவருகின்ற அடையாள உண்ணாவிரதமானது இன்று 5வது நாளாக நடைபெற்று வருகின்றது.

வழமைபோல் காலை 10 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஈகைச்சுடரினை இராமச்சந்திரன் ஜீவகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார் அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைத்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அடையாள உண்ணாவீரதம் ஆரம்பமாகியது..

Allgemein