இலங்கையில் நிழவும் அசாதாரண சூழல்! இராணுவத்தின் பாராட்டை பெற்ற யாழ் மக்கள்

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட மக்களை இராணுவத்தினர் பாராட்டியுள்ளனர்.

யாழ்ப்பாண மக்கள் இன பேதமின்றி பாதுகாப்பு பிரிவினருடன் ஆதரவாக செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ். மாவட்டத்தில் பிரச்சினைகள் இன்றி பாதுகாக்க முடிந்துள்ளதாக யாழ்ப்பாணத்துக்கான படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணக்கப்பாடு மேலும் தொடர்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நபர் அல்லது செயற்பாடுகள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவியுங்கள்.

உடனடியாக செயற்படுவதற்கு பாதுகாப்பு பிரிவு ஆயத்தமாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Allgemein