மகிந்த மற்றும் ரணில் இடையே நடந்த முக்கிய சந்திப்பு

மகிந்த மற்றும் ரணில் இடையே நடந்த முக்கிய சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்ட இந்த சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய ,பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டுமென இந்த சந்திப்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Allgemein