பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாத ஆசிரியைகள்!

பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாத ஆசிரியைகள்!

அவிசாவளை புவக்பிட்டி தமிழ் மகாவித்தியாலயத்தில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் ஆசிரியைகளிற்கு பாடசாலை சமூகம் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி, ஆசிரியைகளின் சம்மதத்துடன் அவர்களை வேறு பாடசாலைகளிற்கு மாற்றம் செய்துள்ளார்.

நேற்று பாடசாலைக்கு முஸ்லிம் ஆசிரியைகள் சென்றபோது, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களான பெற்றோர், வாயில் கதவை இழுத்துமூடி ஆசிரியர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

சேலை அணிந்து வந்தால் மாத்திரமே உள்ளே அனுமதிக்க முடியுமென்றும் தெரிவித்தனர்.

இந்த விடயம் மேல்மாகாண ஆளுனரின் கவனத்திற்கு சென்றதையடுத்து மாகாண கல்விப்பணிப்பாளர், கல்வியமைச்சின் செயலாளர், பாடசாலை அதிபர், ஆசிரியைகளை அழைத்து பேச்சு நடத்தினார் ஆளுனர்.

பாடசாலை சமூகத்தால் அவமதிக்கப்பட்டதால் மீண்டும் அதே பாடசாலைக்கு செல்ல ஆசிரியைகள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் மேல்மாகாணத்திற்குட்பட்ட வேறு பாடசாலைகளில் அவர்கள் இணைக்கப்படவுள்ளனர்.

தாயகச்செய்திகள்