காத்தான்குடியில் தீ விபத்து : பதற்றத்தில் மக்கள்

மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் குறித்த மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதோடு மக்கள் பதற்றத்தில் உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் நஜீம் என்பவருக்கு சொந்தமான மர ஆலையே இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் குறித்த இடத்திற்கு வந்து, தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தினால் குறித்த மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த பெறுமதியான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பனவும் எரிந்துள்ள நிலையில், ஒரு கோடி ரூபாய்கு மேல் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

இத் தீ விபத்திற்கான காரணம் தொடர்பாக இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏற்கனவே குண்டு வெடிப்பு பீதியில் இருக்கும் காத்தான்குடி மக்கள் குறித்த தீ விபத்தினால் மேலும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தாயகச்செய்திகள்