யாழில் குண்டுப்புரளியால் பதற்றம்..!!!

யாழில் குண்டுப்புரளியால் பதற்றம்..!!!

யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் குண்டுவைக்க உள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம் நிறுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதுடன், பிரதேசசபைக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் அபிவிருத்தி தொடா்பாக விசேட கூட்டம் ஒன்று சபையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இந்நிலையில் பிரதேசசபையின் பொதுமக்கள் தொடா்பு அலுவலருக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்த மா்மநபா் ஒருவா் கூட்டம் நடைபெற்றால் சபைக்குள் குண்டு வெடிக்கும் என அச்சுறுத்தியுள்ளாா். இதனையடுத்து பிரதேசசபையினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸாா், விசேட அதிரடிப்படையினா் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதுடன் பிரதேசசபைக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட மா்ம நபா் தொடா்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தாயகச்செய்திகள்