மீண்டும் ட்ரோன் கமெராக்கள்?

இலங்கையின் பல பகுதிகளிலும் ட்ரோன் கமெரா சுற்றி திரிகின்ற நிலையில் நாரஹேன்பிட்டி- ஜாவத்த பகுதியில் வானத்தில் வட்டமடித்த ட்ரோன் கமெராவொன்று பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து காணாமல் போயுள்ளது.
ட்ரோன் கமெரா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அதற்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, உடனடியாக நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்ன மற்றும் ஏனைய பொலிஸார் சிலரும் குறித்தப் பிரதேசத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, குறித்த ட்ரோன் கமெராவை பார்த்தாக பிரதேசவாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே காங்கேசன்துறை,மன்னார் உட்பட பகுதிகளில் ட்ரோன் கமெராக்களது சர்ச்சைக்குரிய நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.
Allgemein