வெடிபொருட்கள் நிரப்பிய லொறி மட்டக்களப்புக்குள் புகுந்ததாக தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாாிய தாக்குதல் ஒன்றை நடாத்தும் திட்டத்துடன் வெடிபொருட்களுடன் லொறி ஒன்று நுழைந்ததாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், பாடசாலைகள், மத தலங்கள், பொது இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், பாதுகாப்பு தரப்பினா் பாாிய தேடுதல் வேட்டை ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றனா்.

நாளை மறுதினம் திங்கள் கிழமை இந்த தாக்குதல் நடாத்தப்படலாம் என கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் கடுமையான தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ள படையினா், மத தலங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக மேலும் தொியவருகின்றது.

தாயகச்செய்திகள்