கட்டுப்பாட்டை இழந்த வானூர்தி, ஆற்றுக்குள் பாய்ந்தது!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன் வில்லே நகரின் வானூர்தி  நிலையத்தில் மியாமி ஏர்லைன்சுக்குக் சொந்தமான போயிங் 737 ரக பயணிகள் வானூர்தி தரையிறங்கியது. 136 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் தரையிறங்கிய விமானம், ஒடுபாதையில் வேகமாகச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து, அருகில் ஓடும் செயின்ட் ஜான்ஸ் நதிக்குள் பாய்ந்தது.

எனினும்  ஆற்றில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் விமானம் மூழ்க வில்லை. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் 142 பேரும் பத்திரமாக இருப்பதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.அவசர கால மீட்புப் படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக போயிங் 737 ரக வானூர்திகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது அதிகாமாகிவிட்டது. அதேவேளை பல நாடுகளில் போயிங் வானூர்திகளுக்கு தடைவிதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்