
இதற்கு கொண்டைக்கடலை தான் காரணம். அத்தகைய கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
தமிழர்கள்களுக்கு இது மிகவும் பிடித்த உணவு. மசாலா அதிகமாக சேர்க்கும் உணவுகளை இந்திய தமிழர்கள் அதிகம் சமைத்து சாப்பிட்டனர்.
அவர்கள் ஆரம்பத்தில் கண்டுப்பிடித்த உணவு காலப்போக்கில் எல்லா பகுதிகளிலும் விரும்பி உண்ண ஆரம்பித்தனர். இன்று சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை சுண்டல் பிடித்த ஒரு உணவு.
தமிழர்கள் இப்படியான உணவுகளை கண்டுப்பிடிக்க இன்டினொரு காரணம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளைப் போக்க உதவி புரிகிறது.
இங்கு கொண்டைக்கடலை சுண்டலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
எடையை குறைக்க உதவும்
கொண்டைக்கடலை சுண்டலையில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.