தடைசெய்யப்பட்ட தௌஹித் ஜமாத் இன் கட்டுப்பாட்டில் 400 பள்ளிவாசல்கள்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் கட்டுப்பாட்டில் 400 பள்ளிவாசல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த பள்ளிவாசல்களின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஈஸ்ரர் திருநாளின் போது இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பினால் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் இலங்கை அமைப்பாக செயற்பட்டதாக தௌஹித் ஜமாத் உள்ளிட்ட இரு அமைப்புக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை செய்ததோடு அவற்றின் சொத்துக்களையும் முடக்கினார்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட தௌஹித் ஜமாத் அமைப்பின் கட்டுப்பாட்டில் இலங்கை பூராவும் 400 பள்ளிவாசல்கள் செயற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கண்டியில் மாத்திரம் சுமார் 50 இற்கும் அதிகமான பள்ளிவாசல்கள் குறித்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த பள்ளிவாசல்கள் இஸ்லாமிய விவகார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

Allgemein