கைது செய்யப்பட்டார் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பிதேச அமைப்பாளர்!

தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டி பிரதேச அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை 42 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான மெளலவியே மேல் மாகாண புலனாய்வாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மேல் மாகாண உளவுத்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக அவரது எத்துன்கஹகொட்டுவ வீட்டை சோதனைச் செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

Allgemein