கண்ணீரில் கரைந்த மரணம் !

கண்ணீரில் கரைந்த மரணம் !
?????????

சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச்சென்று தகனமான தம்பதிகள் !மக்கள் திரளால் நிறைந்த மயானம் .

சுவிஸ் பேர்ன் மாநில காவல்துறையினர் வீதிகள் எங்கும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு, வாகனத்தரிப்பிட வசதிகளை செய்து கொடுத்திருந்தனர்.பிள்ளைகள் விருப்பாததால் மீடியாக்களை அனுமதிக்காது ஊடகவியலாளர்களை பொலிசார் அனுமதிக்கவில்லை என்ற தகவல் உறுதிப்படுத்தப்படாத கூடுதல் செய்தியாகும் .

நேற்றைய தினம் ஶ்ரீலங்கா தூதரகத்தினரும் ,பௌத்த பிட்சுகளும் வருகைபுரிந்து தமது அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

தாயகத்தில் புங்குடுதீவு -வேலணையைச் சேர்ந்த திரு. விக்னேஸ்வரநாதன் , திருமதி வி.கேதாரகௌரி தம்பதிகள் இவர்களாவர்!
கருணையும் அன்பும் நிறைந்து இணைபிரியாது
இணைந்து வாழ்வது பலரால் முடியும் . ஆனால் வாழ்ந்து முடித்து இணைந்தே கடைசியில் போவது என்பது பலருக்கு முடியாதது , ஆனால் தீவிரவாதிகளால் குடும்பத்தையே ஒன்றாக அனுப்பிவைக்க முடியும் . மதவெறி பிடித்த பைத்தியக்கார தீவிரவாதக்கும்பலை ஆதரிப்போரும் தீவிரவாதிகளே .
இதைப் பூண்டோடு அழிக்காதவரை இப்புற்றுநோய்க்கு உலகில் மருந்தில்லை …!

“ கண்ணீரோடு கண்டத்தை பதிவு செய்கிறேன் “
*சுவிஸ் சுரேஷ் *

துயர் பகிர்தல்