வடமராட்சி கிழக்கில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு

வடமராட்சி கிழக்கு- அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து இன்று மாலை  பெருமளவு குண்டுகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸாா் கூறியுள்ளனா்.

அம்பன் பகுதியில் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக பொதுமகன் ஒருவா் அத்திவாரம் தோண்டியுள்ளாா். இதன்போது அத்திவார குழிக்குள் இருந்து ஒரு பிளாஸ்டிக் பரல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டாா் பிளாஸ்டிக் பரலை சோதித்தபோது அதற்குள் பெருமளவு குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடா்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாா் பிளாஸ்டிக் பரலுக்குள் இருந்து பெருமளவு வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனா்.

Allgemein