தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்றாஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்றாஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பபாக பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ம் ஆண்டின் முதலாம் இலக்க அவசரகாலச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாத்தேய் மில்லாது இப்ரஹிம் ஆகிய அமைப்புகளை இலங்கையில் தடை செய்வதாக அறிவித்தார்.

குறித்த அமைப்புக்களின் அசையும், அசையாச் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் பல மதவாத அமைப்புக்களை தடைசெய்யப் போவதாகவும் இதன்போது ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Allgemein