திருகோணமலையில் 215 டெட்டனேட்டர்களுடன் ஒருவர் கைது

திருகோணமலை – இறக்கக்கண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று முற்பகல் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதன்போது, 215 டெட்டனேட்டர்களும் 51 ஜெலட்னைட் குச்சிகளும் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக குச்சவௌி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Allgemein