சாய்ந்தமருதில் பெருமளவான வெடிகுண்டுகள் மீட்பு

அம்பாறை – சம்மாந்துறையில் வீடொன்றில் இருந்து  பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவினர் , இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இணைந்து குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

குறித்த வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு அடையாளம் தெரியாத சிலரால் பெறப்பட்டுள்ள நிலையில் , பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

Allgemein