தொடர்கிறது கடும் பதற்றம்; உடன் அமுலுக்கு வந்த அதிரடி உத்தரவு! மேலதிக படை குவிப்பு!!

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையில் தொடர்ந்த மோதலையடுத்து உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அம்பாறை, கல்முனை, மற்றும் சவளக்கடையில் உடன் அமுலுக்கு வரும்வகையில் இந்த உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மறு அறிவித்தல்வரை தொடரும் என பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார்.

முன்னதாக சாய்ந்தமருதில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட பாதுகாப்புத்தரப்பு அதனைச் சோதனையிட முற்பட்டபோது இருதரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது.

மேலும் அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் உடைமைகள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு மேலதிக படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடும் தேடுதல் வேட்டையும் இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றிரவு 10 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை 4 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Allgemein