வெள்ளவத்தையில் வெடிக்க வைக்கப்பட்ட ஸ்கூட்டர்

கொழும்பு, வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர வகை உந்துருளி  சிறீலங்காப் படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டரின் ஆசனத்தை பாதுகாப்பாக திறப்பதற்காக  பாதுகாப்புடனான வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த படையினர் உரிமையாளரற்ற ஸ்கூட்டரில் வெடிகுண்டு இருக்கலாம் எனச் சந்தித்து இருககையை திறக்க முற்பட்டனர்.

இருக்கை திறக்க முடியாததால் இருக்கையை வெடி வைத்து திறந்தனர்.

ஆனால் இருக்கையின் கீழ்ப்பகுதியில் வெடிகுண்டுகள் எதுவும் இருக்க வில் லை எனக் கணடறிந்தனர்.

Allgemein