அமெரிக்கா புலனாய்வு பிரிவினர் இலங்கை வருகை

இலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளுக்கு உதவ அமெரிக்கா புலனாய்வு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக  பாதுகாப்பு துறை செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ என அழைக்கப்படும் சமஸ்டி விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் இன்று(திங்கட்கிழமை) இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதுடன் விசாரணைகளுக்கு உதவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவுஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்துலக காவல் துறையினர் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவ தயாராகவுள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்