யாழ்.குடாநாட்டில் போக்குவரத்துசேவை முடக்கம்!

யாழ்.குடாநாட்டில் இன்று பிற்பகல் நான்கு மணியுடன் இலங்கை போக்குவரத்துச்சபையின் அனைத்து பகுதிகளுக்குமான சேவைகள் நிறுத்தப்படுவதாக யாழ்.நகரப்பகுதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தனியார் சேவைகள் நிறுத்தப்பட்டநிலையில் இலங்கை போக்குவரத்துச்சபையும் தனது சேவையை நிறுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயகச்செய்திகள்