
இன்று அதிகாலையிலிருந்து இலங்கையின் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் இடம்பெறும் அப்பாவி உயிர்களையும் மதஸ்தானங்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கொடூரமான குண்டுத் தாக்குதல்கள், காட்டுமிராண்டித்தனமான சிந்தனையுள்ள மனித குலத்தை, மனித உயிர்களை மதிக்கத் தெரியாத வன்முறையாளர்களின் தாக்குதல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இயேசு பிரான் மரித்து உயிர்த்தெழும் இன்றைய நாளில் பச்சிளம் பாலகர்களும் அப்பாவி மக்களும் இறைவனை நோக்கி இரந்து இறையாசி வேண்டி நின்ற வேளையில் மனிதாபிமானமற்ற கொடூர வன்மமான எண்ணமுள்ள வெறித்தனக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களைக் கண்டிப்பதோடு இனியும் மக்கள் அவதானமாகவும் பக்குவத்தோடும் பொறுப்புணர்வோடும் நடக்க வேண்டிய தருணமாக இதை நினைத்துச் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
சி.சிறீதரன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு,
கிளிநொச்சி.