உயிரிழப்பு 207ஆக உயர்வு! சந்தேக நபர்கள் 7 பேர் கைது!

இலங்கையில் இன்று பல்வேறு இடங்களில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.அதில்  வெளிநாட்டவர்கள் 35 பெரும் அடங்குவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 450 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் மொத்தமாக 8 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து  நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ரூவான் விஜ்ஜவர்த்தன தெரிவித்துள்ளார்.

Allgemein