யேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும்  உறவுகளுக்கு கரம் கொடுப்போம் நிறுவனத்தின் சந்திரன் குடியிருப்புக்கான செயல்பாடுகள்!

20/04/19 யேர்மனி ஸ்ருட்காட்டில் ????இயங்கும்
உறவுகளுக்கு கரம் கொடுப்போம் ???
அமைப்பு.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் பல உதவிகளை செய்து வரும் எமது அமைப்பு.
சந்திரன் குடியிருப்பு கயட்டை மாமூலை முள்ளியவளை என்னும் கிராமத்து மக்கள், கிணறு இல்லாததால்,இரண்டு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும்,
தாங்கள் பல அரசியல் கட்சிகளையும் பல புலம்பெயர் அமைப்புகளையும்,எமது கிராம மக்கள் குடிப்பதற்கும் அத்தியாவசிய தேவைகளுக்குமாக,கிணறு ஒன்று வெட்டி கட்டித்தர கேட்டு இருந்தோம் ஒருதரும் முன் வரவில்லை.
நீங்கள் ஆவது செய்து தரும்படி கேட்டதற்கு இணங்கி,
எமது அமைப்பு.ஏறக்குறைய நூறு அடி ஆழமான கிணறு ஒன்று
ஒன்பது லட்சம் (900,000)ரூபா
கிணத்துக்கும் (50,000) ரூபா இதர செலவுடன் (950,000)செலவில் வெட்டி கட்டி இந்த கிராம மக்களிடம் நேற்றைய தினம் 19/04/19 எமது அமைப்பின் உறுப்பினர்களான பொன்னுத்துரை றாடோ அவர்களும்,திரு திருமதி சதாசிவம் இராசேந்திரா அவர்களும்,மற்றும் நாட்டுக்காக தனது இரண்டு கால்களையும் இழந்த நிமால் அவர்களும்,எமது வன்னி மாவட்ட செயல்பாட்டாளர் திரு கஜன் அவர்களும் இணைந்து கையளித்துள்ளார்கள்.அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் பராட்டுக்களும்??????மேலதிக விபரம் விரைவில் 

தாயகச்செய்திகள்