சற்று முன் தமிழர்தாயகத்தில் ஒரே நாளில் நிகழ்ந்த பயங்கரம்! பற்றியெரிந்த மரங்கள்

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்துள்ளனர்.

 

அத்துடன் கிளிநொச்சி விசுமடுப் பகுதியில் சற்றுமுன்னர் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு, விசுவமடு தொட்டியடிப் பகுதியிலே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தர்மபாலசிங்கம் தயாநந்தா வயது 17 என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி, தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாயகச்செய்திகள்