ஐதேகவுக்குள் சஜித் – ரவி மோதல் தீவிரம் – தீர்க்கும் முயற்சியில் ரணில்

 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், உதவித் தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான பகிரங்க மோதல் தீவிரமடைந்துள்ளது.

இரண்டு பேரும் மறைமுகமாக குற்றச்சாட்டுகளை வீசி பகிரங்க கூட்டங்களில் உரையாற்றி வருகின்றனர்.

இருவருக்கும் இடையிலான பிரச்சினை மோசமடைந்து வருவது குறித்து கவலையடைந்துள்ள ஐதேகவின் பின்வரிசை உறுப்பினர்கள், இது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனால் விவகாரத்தில் தலையிடுமாறும் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியிருந்தனர்.

இதையடுத்தே, இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஐதேக தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இறங்கியுள்ளார்.

அடுத்தவாரம் இரண்டு தரப்புகளையும் சந்தித்து பேச ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.

Allgemein