September 29, 2022

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

 

இலங்கைப் பிரஜைகள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.

உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை 36,995 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுBy