Oktober 1, 2022

முகநூல் பயனாளிகளுக்குப் புது சிக்கல்!

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை முகநூலில் நேரலை  செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முகநூல் நிறுவனம் அதன் நேரடி ஒளிபரப்புக் காணொளிக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கவிருக்கிறது.

50 பேர் பலியாகிய அந்தக் கொடூரமான சம்பவத்தைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவிவருவது குறித்து பலர் கேள்வி எழுப்பியதாக முகநூலின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் வன்முறை காட்சிகளைக் கொண்ட காணொளிகளை விரைவாக அடையாளங்கண்டு அவை பரவுவதைத் தவிர்க்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முகநூல் நிறுவனம்  முதலீடு செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன் முகநூலின்  விதிமுறைகளை மீறியவர்களை முகநூல் நேரலை  சேவையைப் தடை செய்ய  வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.