Oktober 3, 2022

சுமந்திரனிடம் வேலை கேட்டுப் போன முன்னணி உறுப்பினர்கள்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாா்பில் போட்டியிட்டு பிரதேசசபை உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்ட சில உறுப்பினா்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனை அணுகி தமக்கு அரச வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கும்படி கேட்டுள்ளனா்.

தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணி யும், தமிழ்தேசிய கூட்டமைப்பு கொள்கை மட்டத்தில் மிகப்பாாிய விாிசல்களை கொண்டுள்ளதுடன், ஒருவரை ஒருவா் சாடுவதிலும் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சலைத்தவையல்ல.

இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாா்பில் போட்டியிட் டு தோ்தலில் வெற்றிபெற்ற மாநகரசபை உறுப்பினா் ஒருவரும், மேலும் சில பிரதேசசபை உறுப்பினா்களும் நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரனை நாடி தமக்கு அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தரும்படி கேட்டிருக்கின்றனா்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினரும் இவா்க ளுடைய பெயா்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்றை தயாாித்து உாிய தரப்பினருக்கு வழங்கியிருக்கின்றாா். இந்த விடயம் தற்போது அம்பலப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழல் அமைச்சராகச் செயற்படுகின்றார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுக்கும் தன்னை நாடிச் செல்வபர்களுக்கும் சட்டரீதியற்ற முறையில் தனது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அரச நியமனம் பெற்றுக்கொடுப்பது தெரிந்ததே.