September 29, 2022

இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்குவோம் – ஐ.நா.

Michael Møller( left ) Director General of United Nations Office at Geneva during ceremony at a Michele Bachelet ( right ) Presidente of Chile receives from the policy of the "Champions International Gender" Champion Mention of honor and the distinctive character of this organization. 28 March 2017. UN Photo / Jean-Marc Ferré

ஜெனீவா தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதற்கான உறுதி மொழியை வழங்கியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்கள் ஜெனீவா சென்றுள்ளனர்.

இவர்கள் கடந்த வாரம் ஆணையாளர் மிச்சேல் பச்செலெட்டையும், ஜெனீவா செயலகத்தின் செயலாளர் மைக்கல் மொல்லரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டியுள்ளார்.

மேலும், ஜெனீவா தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக அவசியமான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் தயார் என ஆணையாளர் தெரிவித்தாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்திப்புகளில் மன்னார் மனித புதைகுழி மற்றும் காணிவிடுவிப்பு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை அண்மையில் மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்பட்டது.

இதில், பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கை பாரிய தாமதத்தை கொண்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடதக்கது.