Oktober 3, 2022

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்..!!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என மின்வலு மற்றும் சக்தி வளத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நெடுந்தீவிற்கு நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்த பின்னர், இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

நெடுந்தீவில் வசிக்கும் 4,500 பேரின் மின்சார தேவையையும் பூர்த்தி செய்யும் விதமாக, அங்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை, சூரியசக்தி மறுமலர்ச்சி என்ற வேலைத்திட்டத்தின் ஊடாக, 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் உற்பத்தி செய்யக் கூடியதாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதாக, அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் வவுனியா, வாழைச்சேனை உள்ளிட்ட 5 இடங்களில் 28 சூரிய மின்சக்தித் திட்டங்கள் அமுலாக்கப்பட உள்ளன.

இதற்காக 28 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.