September 28, 2022

ஐநா பேசியும் அடங்காத சிங்களம் அடங்காதசிங்களம் தமிழர்குசமத்துவம்தருமா..?


உலக நாடுகளில் எத்தனையோ நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து இருந்தது ஐநா ஆனாலும் ஈழத்தைப் பொறுத்தவரையில் பிரச்சினையைகளில் எந்தவித முன்னேற்றத்தையும் இதுவரை காணாமல் இருப்பது மிக மிக வருத்தத்துக்குரியதாக அமைந்துள்ளது

ஈழத்தின் போர் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகளில் நெருங்கியுள்ள இந்தச் சமயத்திலும் ஐநாவில் பிரசன்னம் நடைபெற்று வருகின்றது

ஆனாலும் இதில் எந்த அளவுக்கு மீண்டும் ஒரு சரியான தீர்வு ஐநாவால் கிடைக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ள ஈழத்தமிழகள் புலம்பெயர்தமிழர்கள்

என்றாலும் இலங்கை அரசு அதற்கான ஒரு தீர்வைத் தருமா…? என்பது எவருக்கும் தெரியாத ஒரு விடயமாக அமைந்துள்ளது

சிங்களப் பேரினவாதிகள் எந்த வகையிலும் ஈழத் தமிழருக்கு ஒரு சமத்துவமான அங்கீகாரத்தை வழங்க மாட்டார்கள் என்பதை வரலாறுகள் கூறுகின்றன

சமத்துவம் உள்ள நாடாக வாழ்வதற்கும் சம்மதம் இல்லாமல் சிங்களம் ஈழத்தமிழர்களுக்கான ஒரு தனி நாட்டை பிரித்து அவகளுக்கான சுதந்திரத்தை கொடுக்கின்ற எந்தவித நோக்கமில்லாமல் சிங்கள அரசுகள் செயல்பட்டு வருவதை வரலாறுகள் கூறுகின்றன

ஐநா ஈழத் தமிழரின் பிரச்சினைகள் எந்த முடிவும் இல்லாத ஒரு நிலையில் என்னதான் நடைபெறும் என்பதை இந்த ஐநாவின் ஒன்றுகூடல் முடிவுகள் கூறும் ஆனால் இவையும் கண்துடைப்பாகவே இருக்கும் என்பதை அறியக்கூடியதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

சமகாலப்பார்வை ஈழக்கவி எஸ் ரி