September 28, 2022

சமூக வலைத்தளங்களால் 28 ஆண்டுகள் சிறைசெல்லவுள்ள இளைஞன்?! நடந்தது என்ன ???

சமூக வலைத்தளங்களால் 28 ஆண்டுகள் சிறைசெல்லவுள்ள இளைஞன்?!  நடந்தது என்ன ???

நியூசிலாந்து , மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு வீடியோவை சமூக வலைத்தளங்களில் நேரலையில் பரப்பிய குற்றச்சாட்டில் 18 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். துப்பாக்கிச்சூடு வீடியோவை பரப்பியது மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான வாசகங்களுடன் மசூதியின் புகைப்படங்களை வெளியிட்டது என 2 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்த வாலிபருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, அடுத்த மாதம் 8-ந் தேதி மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதற்கிடையில், நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக அண்டை நாடான ஆஸ்திரேலியாவில் உள்ள புனித தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள மத பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றில் அதிக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, தடுப்பு வேலிகள் அமைப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 55 மில்லியன் (சுமார் ரூ.377 கோடி) டாலர் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.