September 28, 2022

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக்கள் கட்டடத் தொகுதி மக்களின் பாவனைக்கு 17-03-2019 கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக்கள் கட்டடத் தொகுதி மக்களின் பாவனைக்கு 17-03-2019 கையளிக்கப்பட்டது.
இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தர்சினி கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கட்டிடத்தொகுதியில் உள்ள நீர்ச்சல் தடாகத்தை விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, விளையாட்டு அமைச்சு உத்தியோகத்தர்கள் ,விளையாட்டு வீராங்கனைகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.