Oktober 1, 2022

வலி வடக்கில் போராட்டம் வெடிக்கும் – மாவை எச்சரிக்கை

யாழ்.வலி,வடக்கில் கடற்படை முகாம் அமைப்பதற்கு 270 ஏக்கா் காணியை சுவீகாிப்ப தற்று அளவீடுகள் 22ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், 22ம் திகதிக்கு முன்னா் அந்த முயற்சியை முறியடிப்போம். என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சோ. சேனாதிராசா, நிறுத்தாவிட்டால் வேறு வழியில் நிறுத்துவோம் எனவும் கூறியுள்ளாா்.
“உயர் நீதிமன்றில் எமது வழக்குகள் இப்பொழுதும் இருக்கின்றன. உயர் நீதிமன்றத் திலும் ஆட்சேபனை தெரிவித்து சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுக்க முயற்சி செய் வோம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
நகுலஈஸ்வரம் கீரிமலைப் பிரதேசத்தில் ஜே/226, ஜே/233 கிராம சேவகர் பிரிவில்  கடற் படையின் கட்டுப்பாட்டில் 270 ஏக்கர் நிலம் இன்னும் விடுபடாமல் உள்ளது. இந்தப் பிர தேசம் நகுலேஸ்வரம் புனித பூமி பிரதேசத்துடன் தொடர்புபட்டது. 2014ஆம் ஆண்டில் வடக்கு கடற்படைத் தளத்திற்கென 270 ஏக்கர் நிலம்
அரசு கையகப்படுத்த அறிவிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில் 40 ஏக்கர் மிள்குடியமர்வு க்கு விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது 228 ஏக்கர் நிலம் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2015ஆம் ஆண்டின் பின் 2016 தைத்திங்களிலிருந்து நகுலேஸ்வரம் புனித பூமிப் பிரதேசங்கள் அரசோ, கடற்படையினரோ கையகப்படுத்தக்கூடாது
என்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் படைத்தளபதிகளுடனான கூட்டங்களில் வலியு றுத்தி வந்துள்ளோம். 2019 ஆரம்பத்திலிருந்து (1) “யாழ்ப்பாண திட்டத்தின் படி வட மாகாணத்தின் சர்வதேச கூட்டிணைப்பு மையம்” மற்றும் தொடர்புள்ள இடங்கள் ஜே/226இ நகுலேஸ்வரம் என்ற பிரதேசத்தில் 62 ஏக்கர் நிலமும்
(2) காங்கேசன்துறைமுகத்தின் பாதுகாப்பு மையமாக 2 ஏக்கர் நிலமும், (3)கடற்படை க்கு மேலும் 164 ஏக்கர் நிலமும் கட்டாயமாக ஜே/233 காங்கேசன்துறை மேற்கில் வே ண்டும் என்றும் கடற்படையினர் வற்புறுத்தியிருந்தனர். நகுலேஸ்வரம் புனித பிரதே சத்தில் நகுலஈஸ்வரம் கோவிலை அடுத்து பத்து முக்கிய கோவில்கள்,
சமாதிகள், புனித நீரூற்றுக்கள், ஈமக் கடனியற்றும் நீர்நிலை கடற்கரை உள்ளது. அத்துடன் தனியார் தொழில் துறைகளுக்குரிய நிலங்களும் கையகப்படுத்த அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது என ஆவணங்களுடன் வாதிட்டு இப் பிரதேசங்கள் கையகப்படுத்த முடியாமல் தடுத்து வந்திருக்கிறோம்.
நகுலேஸ்வரம் புனித பிரதேசமாக எல்லையிடப்பட வேண்டும். சுற்றலாத்துறை பிரதேசமாக பிரகடனப்படுத்த அனுமதிக்க முடியாது. 2012 – 2014 காலத்தில் தனியாருக்குச் சொந்தமான பிரதேசத்தில்தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு வசதியாக 200 கோடி ரூபாயில் மாளிகை கட்டியுள்ளார்.
இம் மாளிகையுடன் சுற்றுலாத்துறை நிர்வாகம் அயற் பிரதேசங்களையும் நகுலேஸ்வரப் பூமியிலும் சுற்றுலா மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2. சீமந்துத் தொழிற்சாலைப் பிரதேசம் – ஜே/233
2016 தைத்திங்களில் பிரதமர் பலாலிக்கு வந்தபோது சீமந்துத் தொழிற்சாலை மீண்டும் இயங்குவது நிலத்தடி நீர் பாதிக்கப்படும், கடல் நீர் புகுந்து விடும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், நில இழப்பு ஏற்படும், நில அதிர்வு ஏற்படும் என்பதால் அத் தொழிற்சாலைப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை,
சிறுதொழில்கள், தொழில் நுட்பத்துறை மையங்களை ஏற்படுத்தி வேலைவாய்ப் பையும, பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படுத்த வேண்டுமெனப் பிரதமரும் நாமும் திட்டமிட்டடிருந்தோம். 2018, 2019ஆம் ஆண்டுகளில் அமைச்சரவைப் பத்திரமும் முன்வைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில் அதற்கான வேலைகளை ஆரம்பிக்க நில எல்லைகள் வரையப்படவும் ஆரம்பிக்கப்பட்டது. சீமெந்து உற்பத்திக்காகச் சுண்ணாம்புப் பாறைகள், அகழ்ந்த கிடங்குப் பிரதேசத்தை நிரப்புவது என்றும் திட்டமிடப்பட்டது.
தற்போது சீமந்துத் தொழிற்சாலை ஜே/233 பிரிவில் கடற்படை ஆக்கிரமிக்க அல்லது சுவீகரிக்க  அரசு இடமளித்தால் தொழில் துறைகள் உருவாக்கவும், வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தவும், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட முடியாது.
இந்த நிலப்பரப்பை தொழில்துறைமையமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுவிடுவோம் எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார். இப் பிரதேசத்தில்தான் சீமெந்துக் கூட்டுத்தாபன நிலங்களும், காங்கேசன்துறை பெரிய மருத்துவமனை 36 ஏக்கர் நிலங்கள் அத்துடன் தனியார் காணிகளும் உள்ளன.
சீமெந்துக் கூட்டுத்தாபனம் 163 ஏக்கர் நிலங்களுண்டு. நல்லிணக்கபுரம் நிலம் சீமெந்துக் கூட்டுத்தாபனத்தினால் இன்னும் விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப் பிரதேசத்தில் இராணுவத்தளமும் நிறுவத்திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் அருகாமையில் கிராம சேவகர் பிரிவு ஜே/231 மாவிட்டபுரப் பகுதிகளில் சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லி கோவில், குளம் குகை உள்ளன. இக் குகையூடாகவே கீரிமலையில் நகுலமுனிவரிடம் சென்று மாவிட்டபுரம் கோவிற்கடவை முருகன் வேல் உள்ள இடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தார் எனும் வரலாற்றுச் செய்தியுமுண்டு.
3. “தலசெவன” விடுதி மையம் சுற்றுலா மையம் ஜே/234 பகுதியில் இதற்காக அப்பகுதியில் தலசெவன விடுதி, சிறுவர் பூங்கா, காங்கேசன்துறை ஆங்கிலப் பாடசாலை, உணவு பாதுகாப்புக் களஞ்சியம், சொத்துப் பாதுகாப்பு பிரதேசம் தனியார் காணிகள் மொத்தமாக 30ஏக்கர்  நிலங்களை
சுற்றுலாப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்திக் கையகப்படுத்த நிலம் அளவீடு செய்ய முயற்சிக்கப்படுகிறது. தலசெவன விடுதி இராணுவ முகாமியிலுள்ளது. பத்திரிகை களில் 232 ஏக்கர் நிலம் கடற்படைத்தளமைக்க சுவீகரிக்கப்படவுள்ளது என விபரமான செய்தி வந்துள்ளது. மிக்க நன்றி. “
தலசெவன விடுதி” சுற்றுலாத்துறை மையங்களுக்கு நிலங்கள் அளவீடு செய்ய விடுவிக்கப்பட்ட அமைச்சினதோ அல்லது ஜனாதிபதி செயலகத்திலிருந்தோ பரிமாறப்பட்ட செய்திகள் இம்மாதம் 10ஆம் திகதி வரையில் தான் எமது கவனத்திற்கு ஆவணமாக கிடைத்தது.
ஜனாதிபதி செயலகக் கூட்டத்தில் இவ்விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,  ஜனாதிபதியுடன் வாதத்தில் ஈடுபட்டிருந்தார். நாடாமன்றத்தில் தலைவர் சம்பந்தனும் நானும், கேப்பாப்பிலவு நில சுவீகரிப்புச் சம்மந்தமாகவும், வலி-வடக்கு நில சுவீகரிப்புச் சம்பந்தமாகவும் கடந்த 12ஆம் திகதி பேசியிருக்கிறோம். எங்கள் தரப்பில் தொடர்புள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் இதற்கு முன்னரே காணி அமைச்சரிடத்தில் எம் முன்னிலையிலேயே சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இன்று காலை பிரதமரிடம் தொடர்பு கொண்டு நில அளவீடுகளை நிறுத்தும் படி கேட்டுள்ளேன். சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி காணியமைச்சர் கயந்த கருணாதிலக்காவையும் காணியமைச்சு செயலாளரையும் சந்தித்து காணி அளவீடு செய்யும் நடவடிக்கையை நிறுத்தும்படியும் கடிதமூலம் கேட்டுள்ளேன். இப்பொழுது ஜே/226  பகுதியில் நகுலேஸ்வரம் தொடர்புபட்ட நிலங்களையும் சுவீகரிக்க வரும் 22ஆம் திகதி அளவீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.
22ம் திகதிக்கு முன்னர் காணியளவீடு நடவடிக்கைகளை நிறுத்தாதுவிட்டால் நாம் அதை தடுத்து நிறுத்தப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.
உயர் நீதிமன்றில் எமது வழக்குகள் இப்பொழுதும் இருக்கின்றன. உயர் நீதிமன்றத்திலும் ஆட்சேபனை தெரிவித்து சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுக்க முயற்சி செய்வோம் என உறுதிப்படுத்துகின்றேன் – என்றுள்ளார்.