September 28, 2022

சர்வதேசமே உனக்கு கண் இல்லையா! கண்ணீரோடு பேரெழுச்சி கண்ட கிழக்கு!!

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நிதி வேண்டி இன்று கிழக்கில் பூரண ஹர்த்தால் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி காந்தி பூங்காவில் முடிவடையவுள்ளது.

இந்த பேரணியில் கலந்து கொண்டோர், காணாமல் ஆக்கப்படவர்களுக்கு சர்வதேசத்தால் மட்டுமே நீதி கிடைக்கும், எமது அப்பா எங்கே, எமது பிள்ளை எங்கே, போன்ற வாசகங்களை அடங்கிய பதாதைகளை தங்கி இருந்தனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி கிழக்கு மாகாணம் தழுவிய பாரிய நீதிக்கான பயணம் மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்திபூங்காவரை இன்று காலை 10 மணி முதல் இடம்பெற்றது.

சொந்தங்களை இழந்த உறவுகள் நீதி வேண்டி ஐ.நாவிடம் கோரிக்கைகள் விடுக்கும் வானுயர் கோசங்களோடு பேரணியாக சென்றனர்.

எங்களோடு வாழ்ந்த உறவுகளைத்தான் வேண்டி நிற்கின்றோம் கொலைகாரனை நீதிபதியாக்குவது போன்றது உள்ளக பொறிமுறையிலான விசாரணை அமையும். எனவே இலங்கை தமிழர்களுக்கு விடயத்தில் சர்வதேசம் பாராமுகமாக இருப்பதை தவிர்த்து நியாயமான தீர்வையே வேண்டி நிற்கின்றோம்.

எனவே எக்காரணம் கொண்டும் கால அவகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது. ஏற்கனவே இரு தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டும் இலங்கை அரசாங்கம் எமக்கு எதனையும் செய்யவில்லை.

சர்வதேச சமூகம் வெளி போர்வையாக அறிக்கைகளை விடாது வீதி வீதியாக உறகளுக்கு நடந்த அநீதீகளுக்கு நீதியான விசாரணை வேண்டும்.

கண்துடைப்பிற்கான விசாரணையை கடந்த 10 வருடங்களாக சர்வதேசம் மேற்கொண்டு வருகின்றது. இனியும் காலதாமதம் செய்வது விசாரணை யை நீர்த்துப்போக செய்யும். பேரணியில் முழங்கிச்சென்றனர்.

இலங்கை அரசில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் ஐ.நாவை நம்பியுள்ளோம். ஆனால் ஐ.நாவிடம் இலங்கை மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரி அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள். எனவே ஐ.நா சபை இலங்கை அரசங்கத்திற்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாது.

கிழக்கு மாகாணத்தில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு வாழ் மக்களும்,பொது அமைப்புக்களும் ,பல்கலைக்கழங்கள்,பூரண ஆதரவை வழங்கியிருந்தன.

இவ் எழிச்சி பேரணியின் போது முஸ்லிம் இனத்தவர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆதரவு தெரிவிக்காத போதிலும் முஸ்லிம் கடைகள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் மட்டகளப்பு பிரதேசத்தில் திறக்கபட்டுள்ளதை காணக்குடியதாகவுள்ளது.