September 29, 2022

விமான நிலையத்திற்குள் சிக்கிய இரு பெண்கள்!!

வெளிநாட்டில் பணி செய்வதற்காக போலி தகவல் சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முயற்சித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளை ஏமாற்ற முயற்சித்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒரு பெண் கடந்த 13ஆம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் செல்வதாக தெரிவித்துள்ளார். எனினும் அவரது கடவுச்சீட்டை சோதனையிட்ட போது அதில் போலி இந்திய விசா ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் சோதனையிட்ட போது அவரிடம் இருந்து குவைத் விசா மற்றும் 3 விமான டிக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அன்றைய தினமே போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த இன்னும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு பெண்களிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது