Oktober 1, 2022

இவ் ஆண்டின் முதலாவது இறுதிப்போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி..!!!

கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலைய வைர விழா முன்னிட்டு நடாத்தும் 07நபர் கொண்ட உதைப்பந்தாட்டத்தின் இன்றைய(18/03/2019) அரைஇறுதியாத்தில் கரணவாய் கொலின்ஸ் அணி எதிர் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி மோதியது..

இப் போட்டியின் முதலாவது பாதியாட்டத்தில் கொலின்ஸ் அணி வீரர் கோல் போட்டு ஆட்டத்தை முன்னிலை படுத்தினார் யங்கம்பன்ஸ் அணி ஆட்டத்தை வேகப்படுத்த யங்கம்பன்ஸ் அணி வீரர் ரதன் கோல் போட்டு ஆட்டத்தை01:01 என்ற அடிப்படையில் சமப்படுத்தினர்.

தொடர்ந்த இரண்டாவதுபாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் ஆடியது இருந்தும் யங்கம்பன்ஸ் அணி வீரர் பலத்தை உடைத்த ரதனின் சிறந்த பந்து பரிமாற்றத்தின் உதவியுடன் தர்சன் அற்புதமான கோலினை பதிவு செய்ய இறுதியாட்ட நேர முடிவில் 02:01என்ற ரீதியில் கரணவாய் கொலின்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி.Image may contain: 14 people, shoes

யங்கம்பன்ஸ் அணி சார்பாக கோல் போட்ட வீரர்கள் விபரம்.
ரதன் :-01
தர்சன்:-01

சிறந்த ஆட்ட நாயகனாக யங்கம்பன்ஸ் அணி வீரர் தர்சன் தெரிவு செய்யப்பட்டார்.

வாழ்த்துக்கள் வீரர்களே

!Image may contain: 1 person, text