September 28, 2022

அமெரிக்க குடியுரிமையை துறக்க அமெரிக்கா பயணமாகிறார் கோத்தபாய!

அமெரிக்க குடியுரிமையை துறக்க அமெரிக்கா பயணமாகிறார் கோத்தபாய!

பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச தீர்மானிக்கப்பட்டு விட்டதை தொடர்ந்து, அவர் தனது அமெரிக்க குடியுரிமையை துறக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார். இதற்காக அவர் அடுத்தவாரம் அமெரிக்கா செல்லவுள்ளார்.

பொதுஜன பெரமுனவிற்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இழுபறி முடிவிற்கு வந்து, கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற முடிவு எட்டப்பட்டுள்ள தகவலை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியானதை தொடர்ந்து, தனது அமெரிக்க குடியுரிமையை துறக்கும் பணிகளை கோத்தபாய ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்.

டி.ஏ.ராஜபக்ச ஞாபகார்த்த நினைவு மண்டபம் அமைப்பதில் அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல அனுமதி கோரி, விசேட மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்காகவே அவர் அமெரிக்கா பயணமாகிறார்.