September 28, 2022

பால்ராஜ் பற்றிய செய்தியால் நீதிமன்ற படியேறிய தமிழ் பத்திரிகை!

பால்ராஜ் பற்றிய செய்தியால் நீதிமன்ற படியேறிய தமிழ் பத்திரிகை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டளை தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியரை விசாரணைக்குட்படுத்த அனுமதி கோரி, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

“வீரத்தளபதி பால்ராஜ்” என்ற கட்டுரையை வெளியிட்டதன் ஊடாக பயங்கரவாதத்தை ஊக்குவித்தார்கள் என்று குறிப்பிட்டு, குறிப்பிட்ட பத்திரிகையின் ஆசிரியரை விசாரணைக்குட்படுத்த பொலிசார் அனுமதி கோரினார்கள்.

இந்த வழக்கு விவகாரத்தை அறிந்த ஒருவர், நேற்றையதினம் வழக்கை விசாரணைக்கு அழைக்குமாறு நகர்த்தல் பத்திரம் சமர்ப்பித்தார். இதை ஏற்றுக்கொண்ட, யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.பீற்றர் போல், வழக்கை நீதிமன்றத்தில் கூப்பிட உத்தரவிட்டார்.

இதன்படி வழக்கு கூப்பிடப்பட, நகர்த்தல் பத்திரம் சமர்ப்பித்தவர் மன்றில் தோன்றினார். தனது ஊடகம்தான் அந்த கட்டுரையை வெளியிட்டதாக குறிப்பிட்டவர், அதை இணையத்தில் இருந்து எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

அவரது விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்றம், பொலிசார் உரிய அறிவித்தலை மன்றிற்கு வழங்காததால், முன்னர் இட்ட திகதிக்கே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.