Oktober 2, 2022

ஒன்று படுங்கள் அரசியல்வாதிகளே.!பாகம்(14)

போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகின்றது இதுவரையில் எமது இனம் கண்டு கொண்ட சிறப்பான வழிகள் என்ன எமது அரசியல்வாதிகள் எதை சாதித்தார்கள் என்பதை இன்று சற்று பார்ப்போம், காலங்கள் கடக்கப் படுகின்றன, கடமைகள் மறுக்கப்படுகின்றது, இதனால் எமது சமுதாயத்தின் சுதந்திரம் பின் போகின்றது, தனித்துவம் அழிக்கப்படுகின்றது, அதனால் இதை புரிந்து கொள்ள வேண்டும் இன்றைய அரசியல்வாதிகள் ,ஆதித்தமிழன் வாழ்ந்த ஈழ மண் இன்று அடுத்தவனிடம் கையேந்தி நிற்கும் அளவுக்கு எமது சமூகத்தின் நிலைப்பாடு உள்ளது, இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சமூக நல் நோக்கு இல்லாத அரசியல் வாதிகள், 10 ஆண்டு நிறைவான பின்னும் இன்னும் ஓர் சரியான தீர்வு எட்டப்படாத சமயத்திலும் எமது அரசியல்வாதிகள் ஒரு தகுந்த நடவடிக்கையை எடுக்காமல் மீண்டும் மீண்டும் அரசோடு இணைந்து நிற்பதனால் எமது இனம் எந்த ஒரு நல்ல பலனையும் அடையப் போவதில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், அதனால்  ஒன்றுபடுங்கள் ஈழத்தமிழர்களே !அதை இன்றே நன்று படங்கள் எமது விழிப்புணர்வு இன்றைய புதிய ஓர் சிறப்பான அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என்ற அந்த நம்பிக்கையுடன் நீங்கள் விழித்தெழுந்து நாமெல்லாம் நிமிர்ந்து நிற்காத பட்சத்தில் எமக்கான விடிவு இன்னும் பின்னோக்கி கொண்டே செல்லும் என்ற இந்த இன்றைய பார்வையோடு அடுத்த தொடரில் தொடர்வோம் ஈழக்கவி எஸ் ரி