September 29, 2022

சற்றுமுன் நடந்த வரலாற்றுச் சாதனை; இலங்கைப் பெண்களுக்கு குவியும் பாராட்டுக்கள்! (புதிய படங்கள்)

சர்வதேச பெண்கள் தினத்தைச் சிறப்பிக்குமுகமாக இலங்கையிலிருந்து முதன்முதலாக பெண் ஊழியர்களை மட்டும் உள்ளடக்கிய விமானம் ஒன்று இன்றைய தினம் பறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு விமானத்திற்குரிய விமானிகள் உட்பட சகல படிநிலை ஊழியர்களும் பெண்களைக் கொண்டதான ஒரு குழுவாக இந்த விமானம் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

சிறிலங்கன் விமான நிறுவனத்தின் UL360 விமானத்தில் இந்த பெண்கள் அணி இன்றைய தினம் சிங்கப்பூரை நோக்கிச் செல்வதுடன் இந்த பயணம் எதிர்வரும் 19ஆம் திகதிவரை குறுகிய நாட்களைக்கொண்டதான காலத்தில் இந்த பயணம் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் குறித்த குழுவினரின் புகைப்படத்தினையும் சிறிலங்கன் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.