Oktober 1, 2022

துயர் பகிர்தல். ஆறுமுகம் மகேஸ்வரி (08/03/2019)

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்தளபதி பிரிகேடியர் ஆதவனின்/கடாபி அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மா இன்று(08/03/2019) யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக தனது மகனை கொடுத்த தாயார் சர்வதேச மகளிர் நாளான இன்று காலமாகியுள்ளார். அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது இறுதிக்கிரியைகள் நாளை(09/03/2019) நெல்லியடி அல்வாய் மேற்கில் காலை 11.30க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.