September 28, 2022

சிரேஷ்ட பேராசிரியராகப் பதவியேற்றார் பேராசிரியர் தி.வேல்நம்பி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி இன்று 05.03.2019 தனக்கு வழங்கப்பட்ட ( 2017 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்படும்படியான) சிரேஷ்ட பேராசிரியர் என்ற தகைமையை ஏற்றுக்கொண்டார்.
.
புத்தூர் மண்ணில் பிறந்து ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் கல்வி பயின்று வணிக முகாமைத்துவத் துறையிலும் தமிழ்த்துறையிலும் உயரிய ஆளுமை பெற்று விளங்கும் எங்கள் சிரேஸ்ட பேராசிரியர் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.
.
பேராசிரியராக நியமனம் பெற்ற ஒருவர் தனது எட்டு வருட சேவைக்காலத்தை நிறைவு செய்து தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யும் போது சிரேஷ்ட பேராசிரியராகத் தரம் உயர்த்தப்படலாம்.
.
பேராசிரியர் என்ற தகைமை பல்கலைக்கழகச் சேவைக் காலத்திலேயே பயன்படுத்துக் கூடியது ஆகும். ( 65 வயதுவரை) ஆயினும் பல்கலைக்கழக சேவையில் 10 வருடங்கள் பேராசிரியராக விளங்கியவர் வாழ்நாள் பேராசிரியர் என்ற தகைமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
.
,இதே வேளை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர்களாகிய பேராசிரியர் கி.விசாகரூபன், பேராசிரியர் ம.இரகுநாதன் ஆகியோரும் சிரேஸ்ட பேராசிரியர்களாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன். எங்கள் ஆசிரியர்களான அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைச் சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன்.