September 29, 2022

பிரான்சு நாட்டின் திருக்குறள் மனனப்போட்டி தமிழ்சோலையின் விதிமுறைகளுக்கு அமைவாக நடாத்தப்பட்டது.

பிரான்சு நாட்டின் முலூஸ் நகரின் அன்புத்தமிழ் கழகமும் பிரான்சின் தமிழ்ச்சோலையும் இணைந்து நடத்திய „தமிழ் திறன்“ போட்டி  இடம்பெற்றிருந்தது.

முலூஸ் நகர மக்களால் மதி அண்ணா என்று அன்பாகவும் உரிமையோடும் அழைக்கப்படும் கேணல். பரிதி அவர்கள் வாழ்ந்த மண்ணில் அவரின் நினைவு மேடையில் நடைபெற்ற இப் போட்டிகளில் மூன்று வயதான குழந்தைகள் முதல் பங்கேற்று தம் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

திருக்குறள் மனனப்போட்டி தமிழ்சோலையின் விதிமுறைகளுக்கு அமைவாக நடாத்தப்பட்டது.

இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தம் திறனை வெளிக்காட்டியிருந்தார்கள்.

அத்தோடு பலதரப்பட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இளைய தலைமுறையினரின் தயாரிப்பில் பல நிகழ்வுகளும் நகைச்சுவைநாடகமும் அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தது.