Oktober 3, 2022

ரணில் – சுமந்திரனால் ஜெனீவாவிற்கு களமிறக்கப்படும் போராளிகள் கட்சி!

ரணில் – சுமந்திரன் ஏற்பாட்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் சாட்சியமளிப்பதற்கு ஜனநாயக போராளிகள் கட்சியினரை தயார்படுத்தி உள்ளனர்.

ஜனநாயக போராளிகள் கட்சியினர் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையாக அண்மைக்காலமாக வலம்வரும் நிலையில் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலம் சிங்கள பேரினவாதிகள் தொடக்கம் சுமந்திரன் வரை தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று கருத்துக்களை விதைத்து வரும் இவ் வேளையில்
ஜனநாயக போராளிகள் கட்சியினர் ஊடக ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என சாட்சியமளிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.