Oktober 3, 2022

-உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்-

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தின்,- 15 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட பயிற்சி நிலையம் இன்று உருத்திரபுரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது. உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தை தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி நிலையத்தில் முறையாக உதைபந்தாட்ட பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் உதைபந்தாட்ட அலுவலர்களால் பயிற்சி மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.

இன்றைய (27-02-2019) ஆரம்ப நிகழ்விற்கு கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக் தலைவர் திரு. நிமலதாசன், கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக் செயலாளர் திரு. சுதாகரன், உதைபந்தாட்ட பயிற்றுனர் திரு. சுதன், கபடி பயிற்சியாளர் திரு. சிவனேசன், மெய்வல்லுனர் பயிற்சியாளர் திரு. ஜெயக்குமார், இளைஞர் கழக விளையாட்டு உத்தியோகத்தர் திரு. மயூரன் விளையாட்டு இணைப்பாளர் திரு. அனுரகாந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய பயிற்சி நிகழ்வில் 60ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பதிவுகளை மேற்கொண்டு பயிற்சிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் பங்குகொண்டு இளையோரை ஊக்கப்படுத்தியது மாத்திரமல்லாது, பயிற்சிகளையும் வழங்கிய கிளிநொச்சி மாவட்ட லீக் உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.