September 29, 2022

முல்லைத்தீவில் தோட்டம் ஒன்றின் மரத்தின் சிக்கிய வெடிகுண்டு! நீண்ட நேரமாக திணறிய அதிரடி படையினர்

முல்லைத்தீவில் தோட்டம் ஒன்றின் மரத்தில் சிக்கியிருந்த கைக்குண்டை சுற்றி மரத்தின் கிளை வளர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நேற்று முன்தினம் தோட்டத்தின் உரிமையாளர் வெடிகுண்டை அவதானித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்.

குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் மரத்திற்குள் சிக்கியிருந்த குண்டை வெளியே எடுப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதனை சுற்றி மரக் கிளைகள் வளர்ந்திருந்தமையால் அதனை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் குறித்த இடத்தை பாதுகாப்பான இடமாக்கி பொலிஸ் விசேட அதிரடி படையினர் வரவழைத்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மரத்திள் கிளைகளை அவதானமாக வெட்டி மரத்தின் நடுவில் சிக்கியிருந்த குண்டை வெளியே எடுத்துள்ளனர்.

போர் காலங்களில் விடுதலை புலி உறுப்பினர்கள் அவ்விடத்தில் இதனை ஏதாவது காரணத்திற்கமைய வைத்து சென்றிருக்கலாம் எனவும் அது நீண்ட காலமாகியமையினால் அதனை சுற்றி மரத்தின் கிளைகள் வளர்ந்திருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.