September 29, 2022

இலங்கைக்கான கால அவகாசம் அதிகளவு வழங்கப்பட்டுள்ளது!

இன்றைய போராட்டத்தின் தாற்பரியத்தை ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ளவேண்டும். எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை காலம் தாமதிக்காமல் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபை மேற்கொள்ளவேண்டும். மனிதஉரிமைகள் சபை தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மீண்டும் காலஅவகாசம் வழங்குவதானது மனித உரிமைகள் சபை தன்னைத் தானே ஏமாற்றுவதோடல்லாமல் பாதிக்கப்பட்ட எமது மக்களையும் ஏமாற்றுவதாகவே அமையுமென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றவிசாரணை உட்பட மனிதஉரிமைகள் சபை தீர்மானத்தின் பலவிடயங்களை நிறைவேற்றப்போவதில்லை என்று ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ள நிலையில் காலஅவகாசம் எதற்காக என்பதை உறுப்புநாடுகளும்  ஐ.நா மனித உரிமைகள் சபை ஆணையாளரும் சிந்தித்துப் பார்த்து மாற்று நடவடிக்கைகளை எடுக்க முன் வரவேண்டும். அதனால்த் தான் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கையாளவேண்டும் என்று கோரியுள்ளோம். அதுசாத்தியப்படாவிட்டால் சர்வதேச சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அமைவான பொருத்தமான ஒரு பொறிமுறையின் கீழ் மனிதஉரிமைகள் சபை இதனைக் கையாளவேண்டும் என்று கோரிதமிழ் மக்கள் பேரவைஊடாகத் தீர்மானம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளோம். அதேவேளை,தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனிதஉரிமைமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஐ. நா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு கிழக்கில் தனது அலுவலகங்களை திறக்கவேண்டும் என்றும் கோரிக்ஐ கவிடுத்துள்ளோம்.
இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரானகுற்றங்கள்  தொடர்பில் ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையிலும் சர்வதேச விசாரணை ஒன்றை ஐ. நா  மனித உரிமைகள் சபை மேற்கொள்வதை இலங்கை அரசாங்கம் சவாலுக்கு உட்படுத்திவரும் விதம் எதிர்காலத்தில் மனிதஉரிமைகள் சபையின் இறைமையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் கொலைசெய்யப்பட்டு  இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட போது பாதுகாப்பதற்கான தனது பொறுப்பில்இருந்து தவறிய ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேசசமூகமும் போருக்குப் பின்னராவது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றில்  காத்திரமான ஒரு வகிபாகத்தைஅமைப்பார்கள்; என்று எதிர்பார்த்து எமது மக்கள் மீண்டும் ஏமாற்றம் அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நீதிதொடர்பில் இலங்கைக்கு இருக்கின்ற கடப்பாடுளை வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டுநிறைவேற்றப்பட்டதீர்மானத்தினைஅமுல்படுத்துவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் சபையும் சர்வதேசசமூகமும்  தேவைக்கு அதிகமாகவே சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கி நெகிழ்ந்த தமது தன்மையை காட்டி இருக்கின்றன. ஆனால் இவற்றைத் து~;ப்பிரயோகம் செய்யும் விதமாகவே இலங்கை அரசங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பெரும்பாலும் கண்துடைப்பு நடவடிக்கைகளிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த 4வருடங்களில் ஈடுபட்டுவந்துள்ளது. குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட அலுவலகம் இன்று செயல் இழந்துள்ளது. ஏற்கனவே அதன் செயற்பாடுகள் அரசாங்கத்தின் போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் விதமாகவே அமைந்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டி அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருந்தார்கள்.  அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவில்லை. தொடர்ந்தும் எமது நிலங்கள்ஆக்கிரமிக்கப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் கூட இன்னமும்  கட்டிக்கொடுக்கப்படவில்லை. இழைக்கப்பட்ட குற்றங்களை மறந்துவிடுவோம். வுpசாரணை எதுவும் தேவை இல்லை என்றுநாட்டின் பிரதமர் சிலவாரங்களுக்கு முன்னர் கூறி எமது மக்களின் மனங்களைப்புண்படுத்தி இருப்பதுடன் எமது நம்பிக்கையீனத்தைமேலும் அதிகரிக்கச்செய்துள்ளார்.
ஆகவே தான் இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு குறிப்பாக போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதில் இனிமேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் வடக்கு கிழக்கில் ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின்  அலுவலகங்களை அமைப்பது உட்படமாற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும்வலியுறுத்தி நிற்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.