Oktober 1, 2022

யாழ் உரும்பிராய் சைவத்தமிழ்வித்தியாலயத்தில் விவேகானந்தன் விளையாட்டுமைதான திறப்புவிழா

யாழ் உரும்பிராய் சைவத்தமிழ்வித்தியாலயத்தின் விவேகானந்தன் விளையாட்டுமைதான திறப்புவிழா கடந்த 11.02.2019 சிறப்பாக இடம்பெற்றது. இந்த விளையாட்டு மைதானத்திற்குரிய காணியினை சமூகசேவகர் திரு.கு.விவேகானந்தன் குடும்பத்தினர் வாங்கி பாடசாலைக்கு அன்பளிப்புச்; செய்தனர். பாடசாலை வரலாற்றில் 103 வருடங்கள் விளையாட்டுமைதானம் இல்லாதிருந்த குறை நீங்கப்பெற்றது. விழாவிற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்இகலாநிதி ஆறு.திருமுருகன் மற்றும் நல்லை சுவாமிகள்இ அதிபர்இ ஆசிரியர்கள் ,மாணவர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். மைதானத்தை அரவிந்தன் – சிவஜெனனி தம்பதிகள் திறந்துவைத்தனர்.